2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பதில் அமைச்சர்கள் நியமனம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 26 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு சென்றுள்ள நிலையில், அவரது அலுவலக பணிகளை நிறைவேற்றுவதற்காக பதில் அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த அமைச்சுக்களின்  இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், நிதி  பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க, முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தொழில்நுட்ப பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவல் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X