Editorial / 2025 செப்டெம்பர் 10 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (10) காலை ஒரு வயது சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியது. கொள்ளுப்பிட்டி கடலில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை 3.30 மணியளவில் கடலில் விழுந்து ஒரு வயது மற்றும் இரண்டு மாதக் குழந்தை காணாமல் போனதாகக்கூறப்படும் சிறுவனின் சடலமாக இருக்கலாமென கூறப்படுகின்றது
முந்திய செய்தி…
கொள்ளுப்பிட்டி கடலில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை 3.30 மணியளவில் கடலில் விழுந்து ஒரு வயது மற்றும் இரண்டு மாதக் குழந்தை காணாமல் போனதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் விழுந்த தாய் மீட்கப்பட்டார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவருடனான தகராறில், அந்தப் பெண் தனது குழந்தையுடன் வெலிமடைப் பகுதியிலிருந்து கொள்ளுப்பிட்டிக்கு வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்தப் பெண்ணின் கணவர் நுவரெலியா பகுதியில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் ஒரு பொலிஸ் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.
அந்தப் பெண், குழந்தையுடன் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றாரா அல்லது அந்தப் பெண் தனது குழந்தையை கடலில் வீசிவிட்டாரா என்பதைத் தீர்மானிக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .