2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பருத்தித்துறை கொலை: லெப்டினன்ட்டுக்கு சிறை

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 31 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.பாரூக் தாஜூதின்

'பருத்தித்துறை இராணுவ முகாமில், 1998ஆம் ஆண்டு ஜூலை 20 திகதியன்று தடுப்பிலிருந்த கைதியை கொன்றார்' என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ லெப்டினன்ட் ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட   கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்றுப் புதன்கிழமை, 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அந்தத் தண்டனை  மேலதிகமாக  கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு நட்டஈடாக  2 மில்லியன்  ரூபாயை செலுத்த வேண்டுமென, கொழும்பு மேல் நீதிமன்ற  நீதிபதி குஸலா சரேஜினி வீரவர்தன,  குற்றவாளியான லெப்டினன்ட் பிமல் விக்கிரமகேவுக்கு கட்டளையிட்டார்.

இதேவேளை, குற்றவாளிக்கு  ரூ.10,000 தண்டம் விதித்த நீதிபதி, தண்டப்பணத்தை செலுத்தாவிடின் மேலும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டிவரும் என்றும் உத்தரவிட்டார்.

வழக்கின் பிரதிவாதியாக இருந்த லெப்டினன்ட் பிமல் விக்கிரமகேவின் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி ,
வழக்கின் பிரதிவாதியான தனது தரப்பைச் சேர்ந்தவர்,  எற்கெனவே 18 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டார். அவர் தனது கடமையை செய்யும் போதுதான்  குற்றமிழைத்தார். அவர், றொபேட் வெலின்டனை கொல்லும் நோக்கில்  துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டிருக்கவில்லை.

பயங்கரவாத இயங்கமான விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த புலி உறுப்பினர் ஒருவர் தப்பியோட முயன்றபோது சுட்டதனால்தான் இந்த மரணம்  சம்பவித்துள்ளது என்றும், தீர்ப்பளிப்பதற்கு முன்னர் மன்றில் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .