2025 ஜூலை 09, புதன்கிழமை

‘பரீட்சைகள் பாதிக்காத வகையில் தேர்தல் நடத்தப்படும்’

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலை மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகளுக்கு எதுவிதப் பாதிப்பும் ஏற்படாதவாறு, பொதுத் தேர்தல் நடத்தப்படுமெனத் தெரிவித்துள்ள  கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ,  அரசியல்வாதிகள், நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொள்ளாமல் செயற்பட்டால், மக்களே அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

நாடாளுமன்றமும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரும் இணைந்து செயற்பட முடியவில்லை என்றால் ஆட்சியாளர்கள் இவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ள அதிகாரம் உண்டு என அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பில், நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை,  “நிலையான அரசாங்கமொன்றை அமைப்பதற்கு மக்களுக்குள்ள உரிமைக்கு இடமளித்து பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி தீர்மானித்தார்” என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அங்கு கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .