2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் கைது

Freelancer   / 2022 செப்டெம்பர் 28 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், பிரசார மேடை நோக்கி  துப்பாக்கிச் சூடு நடத்தியமை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லேரியா, வல்பொல பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடுவெல மற்றும் ஹிம்புட்டானை பிரதேசத்தை சேர்ந்த 34 மற்றும் 29 வயதுடைய சந்தேகநபர்கள் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சந்தேகநபர்கள் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டு வெல்லம்பிட்டி உமகிலிய விளையாட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிரசார கூட்டத்தின்போது, மேடையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன், மேற்படி சந்தேகநபர்களுள் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக, கடந்த2020ஆம் ஆண்டு  பொலிஸ் அடையாள அட்டையை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இச்சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்றையவர் 2018ஆம் ஆண்டு பேலியகொட பிரதேசத்தில் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டிருந்ததாகவும்   தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று புதுக்கடை இலக்கம் 8 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X