Nirosh / 2021 மார்ச் 30 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடத்தின் இதுவரையிலானக் காலப்பகுதியில் 72 பொலிஸார் விபத்துக்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகவும், அதில் 18 பொலிஸார் உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வருடத்தில் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்தபோது 293 பொலிஸார் வாகன விபத்துக்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், அதில் 28 பொலிஸார் உயிரிழந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் பாரியப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும், எனினும் பன்னிபிடிய சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.
நச்சுத்தன்மைக் கொண்ட தேங்காய் எண்ணெய்கள் சந்தையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுவதில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .