2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பஷீரும் இல்லை; ஹசனும் இல்லை

Niroshini   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது தேசிய பேராளர் மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்,தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (12) நடைபெற்றது.   

இம்மாநாட்டில் நாடளாவிய ரீதியிலிருந்து வருகை தந்த கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.   

முஸ்லிம் காங்கிரஸுக்குள் நிலவிய முரண்டுபாடுகளுக்கு, இந்த மாநாட்டுடன் தீர்வுகாணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி ஆகியோர் மாநாட்டுக்குச் சமுகமளிக்கவில்லை.   

இம்மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் இருவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்தது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேர் அடங்கிய 2017ஆம் ஆண்டுக்கான  புதிய நிர்வாக சபையில் தவிசாளர் நியமிக்கப்படவில்லை.

இதேவேளை, கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகக் கூறி, தவிசாளர் பதவியிலிருந்து கடந்த 4 ஆம் திகதி, பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X