Editorial / 2018 ஜனவரி 26 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்தது.
இந்த வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யந்துடுவ முன்னிலையில் நேற்று(25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரதேச சபை ஒன்றுக்காக ஜீ.ஐ.இரும்புகளை பகிர்ந்தளித்து அரசாங்கத்துக்கு 35 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தினார் என்று குற்றம் சாட்டியே அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அத்துடன், திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 minute ago
15 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
4 hours ago