2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பஸ்ஸில் யாசகம் கேட்டால் ரூ.5,000 அபராதம்?

George   / 2017 ஜனவரி 24 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ்களில் யாசகம் கேட்கும் நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், சுமார் 10  ஆயிரம் பேர், பஸ்களில் ஏறி இவ்வாறு யாசகம் கேட்டு வருவதாக  அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு பஸ்களில் யாசகம் பெறுவது, தடை செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டாலும் அதற்கான தண்டனை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

வாகன தவறுகள் தொடர்பில் அபராதத் தொகை நிர்ணயிக்கும் போது, இவ்வாறு பஸ்களில் யாசகம் பெறும் நபர்களுக்கு 5000 ரூபாய் தடை விதிக்கும் யோசனையொன்றை முன்வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த யோசனையை, போக்குவரத்து அமைச்சர், போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான அதிகாரசபை தலைவர் ஆகியோரிடம் முன்வைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .