Freelancer / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எந்தவிதமான சட்டபூர்வமான அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாடசாலைகளில் பல்வேறு செயற்பாடுகளுக்காக மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி சேகரிக்கப்படும் நடைமுறை நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது.
ஆனால்இ தற்போது இவ்வாறான நிதி சேகரிப்புகளுக்கு அனுமதி இல்லை.
நிதி வழங்கக் கோரி சில குழுக்கள் அல்லது தனிநபர்கள் மேற்கொள்ளும் அழுத்தங்களால் மாணவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளானால், மாணவர்களின் நலன் கருதி அதில் தலையிடும் அதிகாரம் கல்வி அமைச்சுக்கு உண்டு.
பாடசாலைகளுக்கு ஆதரவளிக்க விரும்பும் பெற்றோர் அல்லது பழைய மாணவர் குழுக்கள் தன்னிச்சையாக வழங்கும் பங்களிப்புகளைத் தடுக்க முடியாது.
இருப்பினும், இதுவரை இது தொடர்பாக அமைச்சுக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார். R
19 minute ago
33 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
33 minute ago
43 minute ago
48 minute ago