2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

’பாதாளக் குழுக்களை ஒழித்தல் பாதாளம் வரையிலும் பாயும்’

Editorial   / 2021 பெப்ரவரி 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை முழுமையாக இல்லாதொழித்து, அமைதியான சமுதாய சூழலை உருவாக்கும் பொறுப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்தையும் விரைவில் இல்லாதொழித்து, பாதுகாப்பான சூழலை நிச்சயம் உருவாக்க முடியும் என்றார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், 

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கிம்புளா எல குணாவும் அவருடைய மகன் உள்ளிட்டவர்கள், இந்தியா, சென்னை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இவர்களைக் கைது செய்தமைக்கு இந்திய பாதுகாப்புத் தரப்பினருக்கு இலங்கை சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கைது செய்யப்பட்டவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

பாதாளக் குழு செயற்பாடுகள், பாரதூரமான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

1999 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் கூட்டத்தின் போது, ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில், சித்தையா குணசேகரம் எனும் 'கிம்புளா எலே குணா'வை கைது செய்வதற்காக இரகசிய பொலிஸார் தேடி வந்த சந்தர்ப்பத்தில் அவர் இந்தியாவுக்குசத் தப்பிச் சென்றுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது.

இவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பல காலமாக முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைவாகவே தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .