Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 11 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜிதா
நடப்பாண்டுக்கான இந்த அரசாங்கத்தின் வரவு -செலவுத் திட்டம் (பாதீடு), மக்களின் நலன்சார்ந்ததாக இல்லை. ஆகையால், அந்தத் திட்டத்தை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்நாயக்க, இந்தத் திட்டத்தை எதிர்த்து, ஜே.வி.பிவாக்களிக்கும் என்றார்.
யாழிலுள்ள ஜே.வி.பியின் அலுவலத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துக் கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த வரவு-செலவுத் திட்டம், மக்கள் நலன்சார்ந்த திட்டமாக இல்லாமையால், எதிர்ப்பதற்குத் தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்த அவர், போலியாக ஆங்காங்கு ஒரு சில வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது மக்கள் நலன்சார்ந்து உருவாக்கப்படவில்லை என்றார்.
நுண்கடன் வசதிகளைப் பெற்று மீளச் செலுத்த முடியாமல், 2018ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் மாத்திரம் 69 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனரென, புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த அவர், அவ்வாறான கடன் திட்டத்தை இல்லாமல் செய்வதற்கான, ஒரு திட்டத்தை உருவாக்குவது தொடர்பில், ஒரு வார்த்தையேனும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் கிடையாதென்றார்.
“வடக்கில் மாத்திரமன்றி முழு நாட்டிலுமுள்ள இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்பைக் கேட்டு போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான திட்டமும், இந்த வரவு- செலவுத்திட்டத்தில் இல்லை” என்றார்.
வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், வடக்கிலுள்ள தொழிற்சாலைகளை மீள உருவாக்குவதற்கான ஒரு திட்டமேனும் இந்த வரவு- செலவுத்திட்டத்தில் இலையெனத் தெரிவித்த அவர், வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், மக்களுக்கு திருப்பதியளிக்குமெனக் கூறி, திட்டத்துக்கு சார்பாக வாக்களிக்க முடியாதென்றார்.
37 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
4 hours ago
5 hours ago