2025 ஜூலை 09, புதன்கிழமை

பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, நாட்டின் அமைதியின்மைக்கு  சிலர் வழிவகுக்கக்கூடும் என்பதால், பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு,  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும், பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர், மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, அரசியல் உள்நோக்கங்களுக்காக சிலர்  குழப்பம் விளைவிக்கக்கூடும் என்பதால், அது பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமென்றுக் குறிப்பிட்டுள்ள அவர், எனவே பொதுமக்களின் பாதுகாப்புக்கு, எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின்  பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில், இரண்டு நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .