2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாராளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Freelancer   / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும, இன்று (20) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் மாதாந்த மின்சாரக் கட்டணம் 60 இலட்சம் ரூபாய் எனவும், அதனைக் குறைக்கும் வகையில் சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் பெறும் முறை தயாரிக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்றத்தில் 60 இலட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்துவது அவசியமானது.

எவ்வாறாயினும், அதற்கான பணத்தை தமது அமைச்சு வழங்க முடியாது எனவும், தேவைப்பட்டால் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .