2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாராளுமன்றத்திற்குள் அடக்குமுறை: ஜி.எல்.பீரிஸ்

Freelancer   / 2022 செப்டெம்பர் 21 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதைப் போல்  பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அடக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் அழகப்பெரும தலைமையிலான 13 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அரசாங்கம் அவகாசம் வழங்கவில்லை என  ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்துக்கு வெளியே கூடி இன்று (21) ஊடகவியலாளர்களிடம்  கருத்துக்களை வெளியிட்டனர்.

இதன்போது கருத்துரைத்த ஜிஎல் பீரிஸ், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை தற்போது பாராளுமன்றத்திற்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X