Editorial / 2026 ஏப்ரல் 08 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுமனசிறி குணதிலக்க
கொஸ்லந்த நகரிலிருந்து மகல்தெனிய கிராமத்தை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றை பொலிஸார் சோதனையிட்டபோது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவான பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (07) மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, குறித்த முச்சக்கரவண்டியில் 8, 9 மற்றும் 10ஆம் தரங்களில் கல்வி பயிலும் 11 மாணவ, மாணவிகளும், 3 பெரியவர்களும் என மொத்தம் 14 பேர் பயணித்துள்ளனர். பாடசாலை முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த ஆபத்தான பயணம் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட கொஸ்லந்த பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரான சாரதி, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவரை முச்சக்கரவண்டியின் ஆவணங்கள் மற்றும் சாரதியின் அடையாள அட்டையை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கொஸ்லந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
4 minute ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 Apr 2026
11 Apr 2026