2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘பிரதமர் பதவியை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்’

Editorial   / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய சூழ்நிலையில், பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நடத்திய உரையாடல்களின் போதும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, பிரதமர் பதவியைத் தற்போது தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சஜித் பிரேமதான தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் பிரதமரின் பதவியை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை, ஆனால், எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கவின் பிரதமர் வேட்பாளராகத் தான் இருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

எனினும், அது பற்றி கட்சியின் செயற்குழு தான் முடிவு செய்யும் என்றும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே கட்சியின் தற்போதைய உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .