Janu / 2026 பெப்ரவரி 11 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (10) மாலை 4.00 மணிக்கு திருகோணமலை மாநகர சபையில் இடம்பெற்றது.
இது தொடர்பாக திருகோணமலை மாநகரசபையின் முதல்வர் கந்தசாமி செல்வராஜா (சுப்ரா) கருத்து வெளியிட்டிருந்தார்
எதிர்வரும் 13,14,15 ஆகிய தினங்களில் திருகோணமலை மக்கெய்சர் மைதானத்தில் கலை இசை மற்றும் ஆன்மீக நிகழ்வொன்றை நடத்த (TDHA) திருகோணமலை மாவட்ட விடுதி உரிமையாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதற்கான அனுமதி திருகோணமலை மாநகர சபையினால் வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அதன் இறுதி நாளான 15ம் திகதி அன்று மகா சிவராத்திரி தினம் ஆகையால் குறித்த தினத்தில் மாத்திரம் அந்த நிகழ்வுகள் நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவுக்கு திருகோணமலை மாநகர சபை முதல்வரால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த நடவடிக்கைக்கு எதிராக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவரால் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முதல்வருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கானது செவ்வாய்க்கிழமை (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வளக்காளியான குமார் ஜெயக்குமார் என்பவரால் முதல்வருக்காகவும், திருகோணமலை வாழ் மக்களின் நலன் கருதியும் குறித்த ஒட்டுமொத்த நிகழ்வினையும் ரத்துச் செய்வதாக நீதிமன்றில் தெரிவித்து குறித்த வளக்கினை திரும்பப் பெற்றதாக செவ்வாய்க்கிழமை (10) மாலை திருகோணமலை மாநகரசபையின் முதல்வர் கந்தசாமி செல்வராஜா (சுப்ரா) கருத்து வெளியிட்டிருந்தார்.
அ . அச்சுதன்
29 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
4 hours ago
4 hours ago