2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பிரமித்த பண்டாரவுக்குப் பைத்தியம் பிடிக்கும்

Nirosh   / 2022 செப்டெம்பர் 27 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

போராட்டங்களை மேற்கொள்ள பொலிஸாரின் அனுமதியைப் பெற வேண்டுமா? இல்லையா என்பதை பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவரது அப்பா அல்லது தாத்தாவிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும் என சுயாதீனப் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
 
எழுதி கொடுப்பதை அப்படியே வாசித்தால் இறுதியில் பைத்தியமாகிவிடுவீர்கள் எனவும் பிரமித்தவை அவர் கடுமையாக சாடியுள்ளார். 
 
சுதந்திர மக்கள் சபையில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நீதிமன்றங்களுக்கு கல்லெறியும் காலம் விரைவில் வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எங்களது மாகாணத்தில் அமைச்சர்களை தலைக்கவசத்தைக் கொண்டு மக்கள் தாக்குகிறார்கள் எனவும் தெரிவித்தார். 
 
எனவே, அரசாங்கத்தினர் இறுதியில் உயர் பாதுகாப்பு வலயங்களிலேயே ஓடியொழிய வேண்டிய நிலை ஏற்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யாரோ இயக்குகிறார்கள் எனவும் தெரிவித்தார். 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X