Editorial / 2019 ஜூலை 22 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடவளவை தேசிய வனத்தை பார்வையிட வந்த, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூவர் பயணித்த சபாரி வாகனத்தின் மீது, மிருக வேட்டையில் ஈடுபடும் சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தமது 12 வயது பிள்ளையுடன், பிரான்ஸைச் சேர்ந்த தம்பதியினர், உடவளவ வனத்தைப் பார்வையிட்டதுடன் கல்அமுன வனத்தில் ஓய்வெடுத்த போது, மிருக வேட்டையில் ஈடுபட்ட மூவரை புகைப்படம் எடுத்துள்ளனர்.
பின்னர், குறித்த ஜோடி தமது பிள்ளையுடன் வனத்திலிருந்து வாகனம் மூலம் வெளியேறும் போது, குறித்த வேட்டைக்காரர்கள் இவர்களிடம் அநாகரிகமாக நடந்துக்கொண்டுள்ளனர்.
இதற்கு வாகனத்தின் சாரதி எதிர்ப்பை தெரிவித்தப் போது, வேட்டைகாரர்கள் அவர்களிடம் இருந்த துப்பாக்கியால் வாகனத்தை சுட்டுள்ளனர். இதனால் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில், அம்பேகமுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago