2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பிஸ்கட் விலை அதிகரிப்புக்கு காரணம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட் மற்றும் இனிப்பு வகைகளின் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் விலை அதிகரிப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு காரணம் தெரிவித்துள்ளனர்.

டொலர் நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்திக்காக ‘ஏ’ தர கோதுமை மாவை இறக்குமதி செய்ததன் விளைவாக பல உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மே மாதம் கோதுமை மாவின் விலை 74 ரூபாவாக இருந்ததுடன், தற்போது இதன் விலை 290-300 ரூபாவாக காணப்படுகிறது. இது 277 சதவீத  விலை உயர்வு என்று உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .