2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் பிரதேச சபையின் உப தலைவர் கைது

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் பிரதேச சபையின் உப தலைவர் ஜெயம்பதி பத்திராஜா நேற்று (21) மாலை முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரங்குளி செம்பட்ட வேலாசிய பகுதியில், நேற்று முன்தினம் (20) இரவு வீதியில் வெட்டப்பட்டிருந்த பாரிய குழியொன்றுக்குள் விழுந்து நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரங்குளி- சுகந்தகம பகுதியைச் சேர்ந்த, 32 வயதுடைய வர்ணகுலசூரிய நிலந்த பெர்ணான்டோ  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட, மதுரங்குளி- வேலாசிய பிரதேசத்தில், வீதி அபிவிருத்திப் பணிக்காக  வெட்டப்பட்டிருந்த குழிக்குள், மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விழுந்து படுகாயமடைந்த  குறித்த நபர், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, புத்தளம் பிரதேச சபையின் உப தலைவரே குறித்த வீதி புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துவந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், பிரதேச சபையின் உப தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற இடத்தில் எவ்வித அறிவித்தல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும், குறித்த  இடம் இருள் சூழ்ந்து காணப்பட்டதனால் இவ் அனர்த்தம் நேர்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .