Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 01 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 22-ந் திகதி முதல் ஜனவரி 01 திகதி வரை வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்காக 9 இடங்களில் 4 லட்சம் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது.
இந்த தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் 10 நாட்களாக தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் நேரடி இலவச தரிசனத்திற்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்தது.
இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் பகுதிக்கு சென்றனர்.
அங்கிருந்த அதிகாரிகள் நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்து அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது பக்தர்கள் கோவில் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்து திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட்ட போதும் நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இது பற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
48 minute ago
5 hours ago