Nirosh / 2021 மார்ச் 30 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி வட்டக்கச்சி மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியிலேயே புதையல் தோண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாயனூர் காட்டுப் பகுதியில் நேற்றிரவு (29) புதையல் தோண்ட முற்பட்டபோதே இராணுவப் புலனாய்வாளர், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை, கொழும்பு, கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் கருவி மற்றும் ஏனைய பொருட்களும் இவர்கள்பயணித்த மோட்டார் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .