2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

’பேச்சில் மாத்திரமல்ல செயலிலும் காட்டுகின்றோம்’

Freelancer   / 2022 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சட்டம் ஒழுங்கை  உறுதிப்படுத்தாது நாட்டின் ஜனநாயக பயணத்தை முன்னெடுக்க முடியாது எனவும் நாம் எமது வேலைத்திட்டங்களை பேச்சில் மாத்திரம் அன்றி செயலில் அதனை முன்னெடுக்கின்றோம் எனவும் பிரதமர் தினேஸ் குணவர்தன சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10)  நடைபெற்ற ஜனாதிபதி கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்தி வைப்புவேளை இரண்டாம் நாள் விவாதத்தின் போதே பிரதமர் தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல்  உலக பொருளாதாரத்துடன் இணைந்து பயணிப்பது தொடர்பிலும், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார். நாம் எமது வேலைத்திட்டங்களை பேச்சில் மாத்திரம் அன்றி செயலில் அதனை முன்னெடுக்கின்றோம். இதற்கு எதிர்க்கட்சியும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்கின்றோம்.

பாராளுமன்றத்தில் நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த செயற்குழு முறைமையை செயற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 225 பேரும் கலந்துகொள்ளக் கூடிய ஜனநாயக கதவு திறக்கப்படவுள்ளது. 

ஜனாதிபதி, அமைச்சரவை, பாராளுமன்றம், மக்கள் இடையே இருக்கும் இடைவெளிகளை குறைக்க இந்த வேலைத்திட்டங்கள் உதவும். அதேபோன்று நாட்டின் சட்டம் ஒழுங்கை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். இதனை செய்யாது ஜனநாயக பயணத்தை முன்னெடுக்க முடியாது.

நாங்கள் சர்வகட்சி அரசாங்கத்திற்கு செல்ல நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அதற்கு பலர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். இது பாராளுமன்றத்தின் மத்தியில் உள்ள மிகவும் முக்கியமான பொறுப்பாக உள்ளது. இதேவேளை 14,500 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குள் நாங்கள் செல்ல வேண்டும். அதேபோன்று விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட அனைத்து தொழில் உள்ளிட்டவற்றை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X