2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பொதுஜன பெரமுனவிற்கு கிடைத்த இரண்டு வெற்றிகள்

Freelancer   / 2022 செப்டெம்பர் 28 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை மற்றும் பாணந்துறை கூட்டுறவு சபைத் தேர்தல்களில் வெற்றிகள் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எமக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகும், இது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் எப்படி இருந்தபோதிலும் எங்களின் ஆதரவுத் தளம் எங்களுடன் இருப்பதைக் காட்டுகிறது" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பாணந்துறை கூட்டுறவு சபைத் தேர்தலில், சபையின் மொத்தமுள்ள 87 ஆசனங்களில் பொதுஜன பெரமுன தலைமையிலான குழு 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் எதிர்க்கட்சி தலைமையிலான குழு 34 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இதேவேளை, பொதுஜன பெரமுன தலைமையிலான குழு கம்பளை கூட்டுறவு சபையை பிரதிநிதித்துவப்படுத்த 06 ஆசனங்களை வென்றுள்ளது. எதிர்க்கட்சி தலைமையிலான குழு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X