2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இரண்டு  நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஜூலி சங் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது இலங்கை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறுவதை அமெரிக்கா விரும்புவதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து  நிதியைப் பெறுவதில் இலங்கைக்கு அமெரிக்காவின் ஆதரவையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அத்துடன்  இலங்கை மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X