Janu / 2023 ஜூலை 20 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் C.P விக்கிரமசிங்கே அவர்கட்கும் ஊடகவியலாளர்களுக்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று அத்தியட்சகரின் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது
”வவுனியா மாவட்டத்தில் பல பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களின் பல முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுக்கின்றனர். அதேவேளை திருட்டு சம்பவங்கள் பற்றி பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும் போதும் ஒரு சில பொலிஸார் அதன் உண்மையான பெறுமதிகளை மறைத்து தவறான பெறுமதிகளை முறைப்பாட்டில் பதிவதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு செயல்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நாம் கடுமையான நடவடிக்கை எடுப்போம், இது போன்ற சம்பவங்கள் வவுனியாவில் இடம்பெற்றால் பொதுமக்கள் உடனடியாக எமக்கு அறியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்” என சந்திப்பின் போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் தெரிவித்தார்
பொதுமக்கள் தன்னை எந்த நேரத்திலும் அழைக்க முடியும் என்றும் 071-8591340 குறித்த தொலைபேசி ஊடாக தகவல்களை நேரடியாக தமக்கு அறிவிக்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்
1 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago