2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

போத்தல் வீசியவர் கைது

Editorial   / 2025 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (26) கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு (CCD), முன்னாள் நகர சபை உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட நாகொடையைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு, அன்றையதினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்ற வளாகத்திற்கு அருகில்  எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போராட்டக்காரர் ஒருவர் வீசிய போத்தலால் தாக்கப்பட்டதில் பொலிஸ் அதிகாரி காயமடைந்தார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .