2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

போராட்டக்காரர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்

Nirosh   / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

போராட்டத்தால் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவால் கைது செய்யப்பட்டப் போராட்டக்காரர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா லக்ஷமன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் பலிவாங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இளைஞர்கள் போராட்டம் நியாயமானது என்பதாலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

எனவே, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். அதுபோல வன்முறைச் சம்பவங்களால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். வன்முறைச் சம்பவங்களால் கொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X