2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

போலிக் கடனட்டைகளுடன் சந்தேகநபர்கள் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி கடனட்டைகளை பயன்படுத்தி நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில், பொருட்களை கொள்வனவு செய்துவந்த மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (26) கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு இதுதொடர்பில் கிடைக்கபெற்ற தகவலையடுத்து, குறித்த சந்தேகநபர்கள் மூவரும் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்களிடமிருந்து போலி கடனட்டைகள் 13 கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் மூவர் மீதும், நாட்டிலுள்ள பல பகுதிகளிலுமுள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .