2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மு.கா பேராளர் மாநாட்டு தீர்மானங்கள்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது தேசிய பேராளர் மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கே காணலாம்.

சகல இனங்களும் திருப்திப்படும் வண்ணம் தீர்வு காணும் நடவடிக்கையை, அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும்.

மாகாண சபைகளுக்கு, அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் தடைகளின்றிப் பிரயோகிப்பதற்கு, அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்.

அரசாங்கம் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கென, ஒரு மீள்குடியேற்றக் கொள்ளையை உருவாக்கி அமுல்படுத்த வேண்டும்.

இந்நாட்டிலுள்ள தமிழ், முஸ்ஸிம், சிங்கள மக்களின் நிலங்கள் தொடர்பிலான பிரச்சினைகளைக் கையாள்வதில் அரசாங்கமும் அரச இயந்திரமும், வெளிப்படைத் தன்மையைக் கையாள வேண்டும்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலங்களைக் கையாள்வதில் காட்டப்படும் பாரபட்சத்தை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது.

வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தால் கைக்கொள்ளப்பட்டிருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான தனியார் மற்றும் அனுமதியளிக்கப்பட்ட நிலங்கள், மீளக் கையளிக்கப்பட வேண்டும்.

நாட்டிலுள்ள சகல மக்களும் சகல இன மக்களும் தத்தமது நம்பிக்கை சார்ந்த மதங்களைப் பின்பற்றுவதற்கும் அவர்களது கலாசார விழுமியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கும், பூரண சுதந்திரத்தை அரசாங்கம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அத்தோடு, வெறுக்கத்தக்க உரைகள், வன்முறைப் பிரயோகம் என்பவற்றைத் தடுப்பதற்கு, போதிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை, பழைய முறையில் அதாவது விகிதாசார முறையில் மிகத் துரிதமாக நடத்த அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும். உலகளவில் சிரியா, பலஸ்தீனம் மற்றும் இதுபோன்ற இதர முஸ்லிம் நாடுகளில் பல்வேறு இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் முகங்கொடுத்திருக்கும் முஸ்லிம்களுக்காக, இம்மாநாடு, தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர்களுடனான ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X