2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மாணவர்களை கைதுசெய்ய நடவடிக்கை

George   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுபிட்டி பிரதேசத்தில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட மாணவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது மறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக தெல்கந்த சந்தியில் இருந்து ஆரம்பமான பேரணி, கொழும்பு திசை நோக்கி பாதயாத்திரையாக பயணித்தது.

பேரணியை நிறுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின்  உத்தரவை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடம் நுகேகொடையில் வைத்து கொடுப்பதற்கு பொலிஸார் முயன்றபோதும், மாணவர்கள்  தமது பேரணியை தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாக சென்றிருந்தனர்.

குறித்த பேரணியயை தடுத்து நிறுத்த கொள்ளுப்பிட்டி சந்தியில் பொலிஸார் வீதித்தடையை ஏற்படுத்தினர்.

அதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ளாது நுகேகொடை வழியாக தும்முல்ல சந்தியின் ஊடாக கொள்ளுபிட்டி வரை வந்த பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொள்ளுபிட்டி சந்தியில் வைத்து இந்த கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது, பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில்  மோதல் ஏற்பட்டதுடன் மாணவர்கள் 4 பேரும் பொலிஸார் மூவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .