Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய வலயத்தைப் பார்க்கின்ற போது, மிகவிரைவாக முதுமையடையும் நபர்கள் இலங்கையிலேயே வாழ்கின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
‘ஆசியாவிலேயே இலங்கைச் சனத்தொகையில்தான் மிக விரைவாக முதுமையடைவோர் வாழ்கின்றனர். 60 வருடங்களுக்கு மேலான சதவீதம், தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஆயுள் எதிர்பார்ப்பு அதிகம் என்பதனால், 80 வருடங்கள் என்ற சதவீதம் இன்னும் அதிகரிக்கும்’ என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலைமையைக் கவனத்தில் கொண்டு, முதியோரின் சுகாதார நிலைமையை மேம்படுத்துவது தொடர்பில், கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சரின், இளைஞர், முதியோர் மற்றும் அங்கவீனமடைந்தோர் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஆனந்த ஜயலால் மேலும் தெரிவிக்கையில்,
மேற்படி அறிக்கையின் பிரகாரம், சுகாதார வசதிகளை மேம்படுத்தும் முறைமையில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2050ஆம் ஆண்டில், உலகில் வாழுகின்ற முதியோரின் எண்ணிக்கை 1.5 பில்லியனாகும் என்று நம்பப்படுகின்றது. அது மொத்த சனத்தொகையில் 16 சதவீதமாக இருக்கும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
55 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
6 hours ago