2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முதல் நாளில் 137 கடைகளுக்கு எதிராக வழக்கு

George   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய உணவு பாதுகாப்பு வாரம் திங்கட்கிழமை(22) முதல் 29ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உணவுகளை பரிசோதனைக்கு உட்படுத்தல், உணவகங்களை சோதனைகளுக்கு உட்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதல் நாள் சோதனை நடவடிக்கையின்போது, 137 விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 3,212 இடங்களில் சோதனை 131 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சீனியின் மட்டத்தை குறிக்கும் அட்டவணை வேலைத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பிலும் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, 1,722  குடிபான வகைகள் கைப்பற்றப்பட்டதுடன் பழுதடைந்த 1,881 உணவுப் பொருட்களும் அழிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பஸ் தரிக்கும் உணவகங்கள் 31க்கு எதிராக அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட வேலைத்திட்டம் 28ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X