2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மெனிங் சந்தை இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

George   / 2017 ஜனவரி 05 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, மெனிங் சந்தையை வேறொரு இடத்துக்கு, இடாமற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மெனிங் சந்தை வியாபாரிகள்,  இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சகல வசதிகளுடனும்கூடிய சந்தையை வேறொரு இடத்தில் அமைத்துத் தருவதற்கு தாம் உடன்பட்டாலும் தற்காலிக சந்தையொன்றில் வியாபார நடவடிக்கை முன்னெடுப்பதற்கு தாம் ஒருபோதும் இணங்கபோவதில்லை என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்  கூறினர்.

இப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .