Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து, ஆந்திராவில் பேச முடியாது” என, திருப்பதி வெங்கடாசலபதியை தரிசித்துவிட்டுத் திரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் முடித்து திரும்பிய பிரதமர் விக்ரமசிங்க, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை மக்கள் அனைவரும் நலமுடன் இருக்கவேண்டிப் பிரார்த்தனை செய்தேன்” என்று கூறினார்.
இதன்போது, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “இது ஆந்திர மாநிலம், தமிழக மீனவர்கள் குறித்து இங்கே பேச இயலாது. மேலும், இது தொடர்பில் எமது அமைச்சரே பதிலளிப்பார்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
முன்னதாக, பிரதமர், அவரது மனைவி, அமைச்சர்களான டீ.எம்.சுவாமிநாதன், பழனி திகாம்பரம் உள்ளிட்ட குழுவினர், திருப்பதி கோவிலில் சுவாமி சரிதனம் செய்தனர்.
கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் ஆகியோர், பிரதமர் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றனர்.
பிரதமரின் வருகையையொட்டி, திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையம் முதல் ஏழுமலையான் கோயில் வரை, 2,000 பொலிஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
20 minute ago
25 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
25 minute ago
35 minute ago