2026 மே 04, திங்கட்கிழமை

ம.மாகாணத்தில் 7 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா

Nirosh   / 2021 மார்ச் 29 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7ஆயிரத்து 823ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கண்டி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 8 பேருக்கும், நுவரெலியாவில் ஆயிரத்து 573 பேருக்கும், மாத்தளையில் ஆயிரத்து 142 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலேயே அதிகமானோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக கண்டி மாநகரசபைக்குட்பட்டப் பிரதேசங்களிலேயே அதிகமானோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மாத்திரம் 567 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரையில் கண்டி மாவட்டத்தில் 55 பேரும், மாத்தளையில் 11 பேரும், நுவரெலியாவில் 11 பேரும் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .