2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மீள்நிர்ணய அறிக்கை: வர்த்தமானியிடுதல் தாமதமாகும்

Gavitha   / 2017 ஜனவரி 30 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்துன் ஏ ஜயசேகர

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மீள்நிர்ணயச் செயற்குழுவின் அறிக்கையை, இம்மாத இறுதிக்குள் வெளியிடுவது குறித்துத் தனக்குக் காணப்படும் விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, அறிக்கையில் காணப்படும் தவறுகளை, முடியுமானவரையில் விரைவாகத் திருத்தி, இறுதி அறிக்கையை விரைவில் அனுப்புமாறு கோரியுள்ளார்.  

அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இச்செயற்குழுவின் அறிக்கை, அதன் தலைவர் அசோக பீரிஸால், ஜனவரி 12ஆம் திகதி, அமைச்சர் பைஸரிடம் கையளிக்கப்பட்டது.

அத்தோடு, அந்த அறிக்கையை மீளாய்வு செய்யவும் அதில் காணப்படும் தவறுகளைத் திருத்துவதற்கும், மேலுமொரு வாரத்தை, அதன் தலைவர் கோரியிருந்தார்.  

தவறுகளைத் திருத்திக் கொண்டு, அதை வர்த்தமானியிடுவதற்கு, ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பதாகவும், தலைவர் அசோக பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.  

எனினும், அந்த அறிக்கையில், மேலும் பாரிய பிழைகளை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு, தற்போது கண்டுபிடித்துள்ளதாகவும், அதன் காரணமாக அவ்வறிக்கை வர்த்தமானியிடுதல் தாமதித்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.  

அசோக பீரிஸுக்கு அமைச்சர் பைஸர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், உள்ளூராட்சிகளுக்கான திருத்தப்பட்டுள்ள எல்லைகளைக் குறிப்பிடுவதற்கு இவ்வறிக்கை தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதோடு, அவ்வாறான தவறுகளின் காரணமாக, உள்ளூராட்சிகள் எவை என்பதை வாக்காளர்கள் அறிய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

அதைவிட, தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பில், தவறுகள் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.  

இந்த அறிக்கையில் காணப்படும் பெரியளவிலான தவறுகள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விளக்கமளிப்பது தனது கடவை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா, இந்தத் தவறுகள் குறித்து என்ன செய்வது என, செயற்குழு தான் பதிலளிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .