2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மகாண ரீதியில் உதவி வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

George   / 2017 ஜனவரி 09 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தில் பதிவு செய்துள்ள மற்றும் உதவி வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம், மத்திய மாகாண ரீதியில் விரிவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 6ஆம் திகதி முதல், கண்டி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளருக்கு எதிர்ப்பு வெளியிட்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி வைத்தியர்கள் சங்கத்தின் மத்திய மகாண செயலாளர் வைத்தியர் மஹிந்த லியனகே, தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாமை காரணமாக இந்த வேலை நிறுத்தத்தை மத்திய மாகாணத்தின் சகல மாவட்டங்கள் வரை நீடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .