2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

‘மக்களின் குரலை கேட்க வேண்டும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மக்களின் தேவைக்கருதி எவ்வாறு ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தியுள்ளதோ அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் குரலுக்கு செவிமடுக்க வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்  திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே, அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர்,  பொதுஜன பெரமுன கட்சியானது, கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடுவதற்கான அடிப்படைக் காரணம், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கீழ் மட்டத்தில் அதிக கேள்வியும் தேவையும் இருப்பதை அறிந்தே என்றார்.

கோட்டா குறித்த பிரசார நடவடிக்கைகள், அவர் பற்றிய கருத்தாடல்கள் மக்கள் மத்தியில் பெருமளவில் காணப்படுவதால், அதனை நன்கறிந்த பொதுஜன பெரமுன கட்சி, மக்களின் தேவைக் குறித்தறிந்து, ​கோட்டாவை வேட்பாளராக பெயரிட்டுள்ளது என்றார்.

பொதுஜன பெரமுன இவ்வாறு மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, அதிகரித்த கேள்வி நிலவும் கோட்டாவை வேட்பாளராக பெயரிட்டுள்ளதைப்போன்று,  ஐக்கிய தேசியக் கட்சியும் மக்களின் கருத்துகளை செவிமடுத்து வெற்றிபெறக்கூடிய வேட்பாளரை தெரிவுசெய்யவேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .