2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

‘மக்களின் தெரிவு சஜித்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெற்றிபெறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை நாட்டு மக்கள் கோருகின்றனரெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார அவருடன் இணைந்து பிரதமர் உள்ளிட்ட அனைவரும் முன்நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றார்.

காலியில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், கட்சி என்ற வகையில் கூட்டமைப்பு ஒன்றை அமைத்து, அக் கூட்டமைப்பின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றார்.

நாட்டு மக்கள் தற்போது சஜித் பிரேமதாஸவை நிறுத்துமாறு கேட்கின்றனர். தனி ஒருவரால் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்நோக்கி கொண்டுச் செல்ல முடியாது. ஆகவே, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என, மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .