2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

’மக்கள் உணரக்கூடிய நல்லிணக்கமே அவசியம்’

Freelancer   / 2022 ஓகஸ்ட் 20 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரினாலும், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ள  மக்கள் உணரக்கூடிய வகையில், நம்பகத்தன்மையுடைய நல்லிணக்க வேலைத்திட்டங்களே வடக்கிற்கு அவசியம் என யாழ், சிவில் பிரதிநிதிகள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-காரிடம் வலியுறுத்தியுள்ளனர். 

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று (19)  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர், அரசாங்க அதிபர் மற்றும் ஆளுநர் ஆகியோருடனும் கலந்துடையாடியிருந்தார். இதன்போது, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள வடக்கு மக்களின் வாழ்வாதார நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது. 

அபிவிருத்திக்கான உதவிகளுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து கலந்துரையாடப் பட்டிருந்ததுடன்,  சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மீள்குடியேற்றம், நீதியை வலுப்படுத்துதல் மற்றும் தண்டனையின்மைக்கு எதிராகப் போராடுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் மட்டத்தை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளையும் அவர் முன்வைத்துள்ளார். 

மேலும், யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியிருந்த அவர், வடக்கின் நிலைமைகளை கேட்டறிந்துகொண்டுள்ளனர். இதன்போது, வடக்கிலுள்ள மக்கள் உணரக்கூடிய விதத்தில் மேலும் நம்பகத்தன்மையையும், பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென சிவில் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .