Lenin Raj / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கணினி குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளைச் செய்வதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாகக் கொண்டு வந்த இரண்டு சீன நாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31 மற்றும் 35 வயதுடைய ஒரு சீன ஆணும், ஒரு பெண்ணுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வியாழக்கிழமை 10 அன்று அதிகாலை 01:20 மணியளவில் சீனாவின் குன்மிங் நகரில் இருந்து சைனா ஈஸ்டர்ன் MU-6017 என்ற விமானம் மூலம் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை வெளிப்படுத்தாமல், விமான நிலையத்தின் ஊடாக வெளியேற முயன்றபோது அதிகாரிகளிடம்
விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், கணினி குற்றங்கள் மற்றும் நிதி மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை காவல்துறையின் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago