Editorial / 2025 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடிகட்டுதல், ஒலியொரெசின் மற்றும் ஒதுக்கியவாறான மீள் ஏற்றுமதிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மசாலாப் பொருட்கள் ஏற்றுமதி செய்தல் மற்றும் தயாரித்தலுக்கான நடபடிமுறைகளுக்கு 2023.12.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கருமங்களுக்காக 2024 ஆம் ஆண்டு 10ஆம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒழுங்குவிதிகளுக்கமைய தேர்ந்தெடுக்கப்பட்ட மசாலாப் பொருட்கள் இறக்குமதி செய்தல் மற்றும் பதனிடல் தொழில்முயற்சிகள் சில தற்போதும் இலங்கை முதலீட்டுச் சபையுடன் துணை ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டுள்ளன.
தொழில்முயற்சியாளர்களுக்கு 'அங்கீகரிக்கப்பட்ட முயற்சியாண்மை' தரத்தை வழங்குவதற்கு இலங்கை முதலீட்டுச் சபையால் விதந்துரைத்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மசாலாப் பொருட்களின் இறக்குமதி மற்றும் பதனிடல் மற்றும் எண்ணெய் வடிகட்டல், ஒலியொரெசின் மற்றும் ஒதுக்கப்பட்டவாறான மீள் ஏற்றுமதி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட நடபடிமுறைகளுக்குத் தேவையான விடயங்களைப் பூர்த்திசெய்துள்ள கீழ்க்காணும் தொழில் முயற்சியாளர்களுக்கு அங்கிகரிக்கப்பட்ட முயற்சியாண்மை நிலைமையை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13 minute ago
22 minute ago
30 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
30 minute ago
47 minute ago