2025 ஜூலை 26, சனிக்கிழமை

மணல் சிற்பங்களால் மகாராணிக்கு அஞ்சலி

Freelancer   / 2022 செப்டெம்பர் 10 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் அரியணையை நீண்ட காலமாக அலங்கரித்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96ஆவது வயதில் காலமாகியதைத் தொடர்ந்து, இந்திய மணல்  சிற்பக் கலைஞர்கள், மகாராணியின் பிரம்மாண்ட மணல் சிற்பங்களை உருவாக்கி அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

ஒடிசாவின் பூரியைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான மனாஸ் சாஹூ, கோல்டன் சீ பீச் என்றழைக்கப்படும் தங்கக் கடற்கரையில் எலிசபெத் ராணியின் அழகான, பிரமாண்டமான மணல் சிற்பத்தை உருவாக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார்.


 
இதேவேளை, இன்னொரு பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் மகாராணியின் அழகான  சிற்பத்தை பூரி கடற்கரையில் உருவாக்கி அதை 740 ரோஜாக்களால் அலங்கரித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X