2025 மே 15, வியாழக்கிழமை

மதுபானசாலைக்கு இடைக்கால தடை

Freelancer   / 2023 ஜூலை 06 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கரன் 

கிளிநொச்சி,  முழங்காவில் பகுதியில் அமைக்கப்பட்டுவரும்  மதுபானசாலைக்கு, வியாழக்கிழமை (06) முதல்  14 நாட்கள் தற்காலிக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட முழங்காவில் பிரதேசத்தில் முழங்காவில் விநாயகர் ஆலயம், பாடசாலை, ஆசிரியர் விடுதி, பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் மையப் பகுதியில் மதுபான சாலை அமைப்பதற்கு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

 குறித்த சம்பவம் தொடர்பில் பொதுத் தொல்லை ஏற்படுதவதாக தெரிவித்து, பொலிஸாரால் வழக்குத் தாக்கல்  செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, வியாழக்கிழமை (06) குறித்த வழக்கு விளக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பொது அமைப்புகள்  சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ சுமந்திரன், சட்டத்தரணி எஸ். விஜய ராணி உள்ளிட்டோர் முன்னிலையாகி இருந்தனர். 

இதனையடுத்து, குறித்த பிரதேசத்தில் இருக்கின்ற பாடசாலை மற்றும் அருகில் இருக்கின்ற மிகப் பழமையான ஆலயம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இது அமைந்திருப்பதனால் இதற்கான  தடை உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறு விண்ணப்பம் செய்யப்பட்டதை அடுத்து மேற்படி விடயங்களை கருத்தில் எடுத்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எதிர்வரும் 20 ஆம் திகதி மறுதவணை இடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .