2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இன்று ஆரம்பம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே ஜெனிவா சென்று அங்கு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி எரந்த வெலியங்கே ஆகியோர் ஜெனிவா சென்றுள்ளனர்.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக இலங்கையில் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் நேற்று ஜெனிவா சென்றடைந்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .