2025 மே 22, வியாழக்கிழமை

மனைவி வீட்டை வீடியோ எடுத்தவர்களுக்கு விளக்கமறியல்

Freelancer   / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் வீட்டை வீடியோ எடுத்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களையும் மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது. 

வீட்டில் இருப்பவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பன்னல பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோதே மேற்படி இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

கைதான 21 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X