Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 21 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோத போதைப் பொருள் ஒழிப்புக்கு எதிராக கடந்த நான்கரை வருடத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் எதிர்வரும் வாரங்களில் புதிய தோற்றத்துடன் செயற்படுத்தப்படுமென,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதேப்போல் போதை வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரணத்தண்டனை வழங்குவதற்கு அரசு எடுத்த தீர்மானமும் எவ்வித மாற்றமுமின்றி முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேசிய போதை ஒழிப்பு வாரம் தொடர்பான நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், முல்லைத்தீவு -முள்ளியவலை வித்தியானந்தா பாடசாலையில் இடம்பெற்ற போது, அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போதைப் பொருள் ஒழிப்பு சவாலில் வெற்றிப்பெற்றுள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி முன்னெடுத்தத் தீர்மானங்களை தானும் முன்னெடுக்காமைக்கு காரணம் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பயமல்ல என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி சட்டவிரோத போதை வர்த்தகர்களுக்கு எதிராக முன்னெடுக்கும் கடும் நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமுமில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago